தொழில்வாண்மை

AAT இலங்கை நிறுவனத்தினால் தொழில்சார் கணக்காளர்களுக்கென வெளியிடப்பட்டிருக்கும் நடத்தை நெறிக்கோவை (Code of Ethics) 2016 ஆம் ஆண்டில் கணக்காளர்களின் சர்வதேச சம்மேளத்தினால் (IFAC)) பிரசுரிக்கப்பட்ட தொழில்சார் கணக்காளர்களுக்கான நடத்தை நெறிக்கோவையை அடிப்படையாகக் கொண்டதாகும். இலங்கை கணக்கீட்டுத் தொழில்நுட்பவியலாளர்களின் கழகம் (AAT) கணக்காளர்களின் சர்வதேச சம்மேளத்தின் முழுமையான ஓர் அங்கத்துவ அமைப்பு என்ற முறையில், ஒரே சீரான தரநியமங்களுடன் இணைந்த விதத்தில் கணக்குப்பதிவியல் தொழில் துறையை அபிவிருத்தி செய்து, மேம்படுத்தும் IFAC யின் பரந்த குறிக்கோளை நிறைவேற்றி வைக்கும் கடப்பாட்டினைக் கொண்டுள்ளது.2017 யூலை மாதத்தின் பின்னர் இலங்கையில் தொழில்சார் சேவைகளை நிறைவேற்றி வைக்கும் இலங்கை AAT கழகத்தின் அனைத்து அங்கத்தவர்களும் இந்த நடத்தை நெறிக்கோவைக்கு இணங்கி ஒழுகுவது கட்டாயமானதாகும்.

இலங்கை AAT கழகத்தின் அங்கத்தவர்கள் AAT யினால் வெளியிடப்பட்டிருக்கும் ஒழுக்க நெறிமுறைகளுக்கு இணங்கி ஒழுக வேண்டும் என எதிர்பார்க்கப்படுகின்றனர். அதற்கு இணங்கியொழுகத் தவறினால், சம்பந்தப்பட்ட அங்கத்தவர்களின் நடத்தை தொடர்பாக AAT இலங்கை கழகத்தின் கணக்காய்வு, தொழில்சார் ஒழுக்க நெறிமுறைகள் மற்றும் இடர் முகாமைத்துவ கமிட்டி மற்றும் ஆட்சிமன்றக் குழு என்பவற்றினால் நடத்தப்படும் புலன் விசாரணையை எதிர்கொள்ள வேண்டி நேரிடும்.