பயிற்சித் தேவைகள்

மக்கள் மற்றும் தலைமைத்துவ திறன்கள் பயிற்சியுடன் இணைந்த விதத்தில் ஒரு வருட கால செய்முறைப் பயிற்சியை பூர்த்தி செய்த பின்னர் (யூ லை 2015 தொடக்கம் அமுலுக்கு வரும் விதத்தில்) இறுதிப் பரீட்சையில் சித்தியடைந்திருக்கும் ஒருவர் AAT இலங்கை அங்கத்துவத்தை பெற்றுக்கொள்வதற்கு விண்ணப்பம் செய்ய முடியும்.

விதித்துரைக்கப்பட்டிருக்கும் ஒரு வருட கால செய்முறைப் பயிற்சியை பூர்த்தி செய்யும் பொருட்டு நீங்கள் பின்வரும் பயிற்சித்திட்டங்களில் ஒன்றை பூர்த்தி செய்ய முடியும் :

  • கண்காணிப்புக்கு உட்படுத்தப்படாத பயிற்சி (அனுபவ பதிவேட்டு முறை)
  • கண்காணிப்பின் கீழ் இடம்பெறும் பயிற்சி ( ஒப்பந்த முறை)

நீங்கள் இலங்கை பட்டயக் கணக்காளர் நிறுவனத்தில் (CA - Sri Lanka) பட்டயக் கணக்கியல் கற்கை நெறியொன்றை படிக்க விரும்பினால் மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் B திட்டத்தை தெரிவு செய்ய வேண்டும் என AAT நிறுவனம் பரிந்துரை செய்கின்றது. B முறையின் கீழ் இலங்கை பட்டயக் கணக்காளர் நிறுவனத்தின் செய்முறை பயிற்சியிலிருந்து நீங்கள் விலக்களிப்புக்களை பெற்றுக்கொள்ள முடியும்.

செய்முறை பயிற்சி தொடர்பான மேலதிக தெளிவுபடுத்தல்கள், அறிவுறுத்தல்கள் அல்லது வழிகாட்டுதல்கள் என்பன உங்களுக்குத் தேவைப்பட்டால் தயவு செய்து தொடர்பு கொள்ளவும் : AAT இலங்கை - கல்வி மற்றும் பயிற்சிப் பிரிவு: தொலைபேசி 011-2559669 அல்லது மின்னஞ்சல் training@aatsl.lk

 

பயிற்சி தொடர்பான விதிமுறைகள்